இனிக்கும் தமிழ் !!

ஜெய் குருதேவ் !!
என்னதான் இருந்தாலும் , அவங்கவங்களுக்கு அவங்க தாய் மொழி அமிர்தம்தாங்க , இல்லையா ?!
தமிழ் 
கேட்க இனிக்கும் ...
பேச இனிக்கும் 
எழுத இனிக்கும் 
படிக்க இனிக்கும் 
அட ...
பழகவும்  இனிக்குங்க !! 
************************************************************************************************************
நம்ம தமிழே ஒவ்வொரு ஊரிலும் , ஒவ்வொரு விதமா  பேசப்படுகிறதில்லையா ...
சென்னைத் தமிழ் , நெல்லைத் தமிழ் , கோவைத் தமிழ் , மதுரைத் தமிழ் அப்படின்னுட்டு .
 இந்த கோவைத் தமிழ் எடுத்துகிட்டம்னா , 
ஒரே மரியாதை தான் போங்க !!
சும்மா , வார்த்தைக்கு ஒரு "ங்க" சேர்த்து , மரியாதை மழையா பொழிஞ்சு  தள்ளிடுவாங்கன்னா பார்த்துக்கோங்களேன் !!
 கோவைக்கு மாற்றலாகி போன ,  நம்ம நண்பர் ஒருவர்  சொன்னாரு  ,
" அட , அதை ஏன் கேட்கற ...
கோவையில , கன்னாபின்னான்னு சண்டை போட்டுக்கிறவங்க கூட , "வாங்க" , "போங்க " அப்படின்னு மரியாதை குறையாம தான் பேசிக்குவாங்க. பார்க்க ரொம்ப தமாஷா இருக்கும்  !!"
அது அப்படின்னா , சென்னைத் தமிழ் அதுக்கு நேர்மாறா இல்ல இருக்கும் .
" இன்னாம்மா இன்னா ...படா பேஜாரு பண்ணிகினு கீறியே ,  ஒடம்பு எப்படி கீது ?" 
 தமிழ் எப்படி பேசக் கேட்டாலும் இனிக்கத்தான் செய்து !! 
***********************************************************************************************************
நம்ம தமிழ்நாட்டுக்காரங்க மாதிரி யாரும் பழமொழியும் , குறள் ,ஆத்திசூடி போன்றவைகளை அன்றாட உரையாடல்களில்  உபயோகிக்கிறதில்லைன்னு நினைக்கிறேன் .
எந்தவொரு காலக்கட்டத்துக்கும், நிலைமைக்கும் ஏற்றவாறு , எண்ணற்ற பழமொழிகளைச் சொல்லிவிட்டு சென்று விட்டார்களே நம் பெரியவர்கள் .
என் நண்பர் ஒருவர் , ஆச்சர்யம் மிகுந்த தொணியில கேட்பார் , "அதெப்படி எல்லாவற்றிற்கும் ஒரு பழமொழியை  எடுத்துவிடுகிறீர்கள் , தமிழர்கள்  நீங்கள்  ?!" என்று . அவர் ஆர்வத்துடன் அதன் ஆங்கிலமொழி பெயர்ப்பையும் கேட்டு வியந்து போவதைக் கண்டு , நம் தமிழ் மீது , எனக்குப் பெருமையாக இருக்கும் .
***********************************************************************************************************
இடத்துக்கு தகுந்த மாதிரி மனுஷங்க தங்கள் பழக்க வழக்கங்களை  மாத்திக்கிற  மாதிரி , 
தமிழ் கூட தன்னை மாத்திக்குது என்பதில் ஆச்சர்யம் என்ன ?
கர்நாடக எல்லையிலிருக்கும் ஓசூர் மற்றும் பெங்களூரிலிருக்கும் தமிழ்-ல சில எடுத்துக்காட்டு :
*ஆமாவா ? * 
*அப்படியா * வை ஆமாவா ன்னு மாத்திட்டாங்க .ஆரம்பத்துல இது என்னடா தமிழும் இல்லாமா , கன்னடமும்  இல்லாம ஒரு மொழி , அப்படின்னும் தோணும்.அப்புறம் பழகிடுச்சு .
************************************************************************************************************என் கூடப் பணி புரிபவர் ஒருவருக்கு  தமிழ் கத்துக்கணும்னு ரொம்ப ஆசை .
அவருடைய தாய் மொழி தெலுங்கு.
அவர் என்கிட்டே , " மேடம் , எனக்கு தமில் பேசக் கத்து குடுங்க !" அப்படின்னு கேட்டார் ஒரு நாள் .
"அதுக்கென்ன , கத்துக் குடுத்தாப் போச்சு , 
ஆனா முதல்ல *தமிழ் * என்று சரியாக உச்சரிக்கக் கத்துக்கோ ...அப்புறம் பார்க்கலாம் !" என்றேன் நான் .
பாவம் , அவரால் இன்று வரை , தமிழை தமிழ் என்று உச்சரிக்க முடியவில்லை . 
ஆமாம் ,நம்மூர்ல கூட , ஸ்டைல்-ஆ , கன்னாபின்னான்னு ,டாமில் , தமிள் , டேமில் என்று சொல்வதைக் கேட்டால் என்னவோ போலிருக்கும் . சில சமயம் கோபமே வந்துடும் !!
 ********************************************************************************************************

அன்பு மற்றும் புன்னகையுடன் ....
உங்கள் சுவேதா 

No comments:

Post a Comment

It's not you who serve the Guru...but it's the Guru who serves you !!

Last month we(  me and my husband) had gone to attend my cousin's son's wedding in Chennai. They had booked the train tickets to Ba...